பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தில் ……….

Posted by - February 4, 2017

பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கைக்கான நட்புறவு விஜயமாக இந்த கப்பல் இங்கு வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்தவுடன் திருகோணமலை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கடலோர காவற்படையினரின் கப்பலான தாஜூடீன் இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் காதில் மக்களின் பிரச்சினை விழுவதில்லை-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - February 4, 2017

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆர்ப்பாட்டம், பணிப் பகிஷ்கரிப்பு என்பன நாளுக்கு நாள் இரண்டிரண்டாக அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அதிகரித்துள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பன குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று நாட்டில் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. நாட்டு பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில்

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் ஒருவர் கைது

Posted by - February 4, 2017

அலரி மாளிகையையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதுடைய இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த அழகை ரசிப்பதற்கு இவ்வாறு படம் பிடித்ததாக பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர் வத்தளை பிரதேசத்தில் குடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017

வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய படையெடுப்பிற்குள்ளானது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த பிரித்தானியர்கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக மொழி, இனம், சமயம், பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு ரீதியில் முற்றாக வேறு வேறான தனித்துவத்தைக் கொண்டிருந்த இரு தேசிய இனங்களையும் ஒற்றையாட்சி அமைப்பிற்குள் ஒன்று சேர்த்திருந்தார்கள். பிரித்தானியர்களின் ஒற்றையாட்சிக்குள்

தமிழர்களின் கறுப்பு தினமான சிறீலங்காவின் சுதந்திர தினம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - February 4, 2017

இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம் அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அரைக்காலனிய நாடே இலங்கை ஆகும். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியதாக பிரித்தானியா அறிவித்து சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட தமக்கான தேசியக்கொடி ஏற்றப்படும் போதே அதில் தமிழத் தேசிய இனத்திற்கான இடம் மறுக்கப்பட்டு சிறீலங்காவின் சுதந்திரமானது தமிழர்களுக்கானதில்லையென சிங்களவர்களால் பறை சாற்றப்பட்ட்டது, இதற்கு வித்திட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின்

சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்! அரசாங்கம்!

Posted by - February 4, 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

பிரதேச செயலாளருக்கு எதிராக ரஞ்சன் முறைப்பாடு

Posted by - February 4, 2017

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (03) ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பேச கெமுனுவுக்கு உரிமையில்லை

Posted by - February 4, 2017

சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும் அது குறித்து செயற்படுத்துவதற்கும் கெமுனு விஜேரட்னவுக்கு அதிகாரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி

Posted by - February 4, 2017

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது வடமாகாண சபையின உறுப்பினர்களாகிய எம்.கே.சிவாஐிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையில் சிவில் அமைப்பின் ஆதரவாளர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், ஒன்றிணைந்து எமக்கு இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் எமக்கு கறுப்பு தினம் என்று தெரிவித்து கவனயீர்ப்பு