இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்திற்கு எலிசபெத் மகாராணி, நரேந்திர மோடி வாழ்த்து
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்திற்காக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ள தகவலில் இலங்கை மிகவும் பெறுமதியான அயல்நாடு என குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை மேலும் சுபீட்சத்தை எட்ட வேண்டும் என தாம்

