இந்தியாவின் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்டமாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
கோவாவில் அதிகபட்சமாக 83 சதவீத வாக்குகளும், பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ், ஆளும் ஷிரோமணி அகாலிதளம் – பாரதீய ஜனத்தா கட்சி கூட்டணி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே போட்டி நிலவுகிறது.
ஆயிரத்து 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணியளவில் ஆரம்பமான வாக்கு பதிவுகள் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.