யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போயுள்ளது

Posted by - February 8, 2017

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த யாழ்தேவி தொடரூந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர, குருநாகல் முத்தெட்டுகல மற்றும் மஹவ முதலான தொடரூந்து நிலையங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பணப்பொதியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தொடரூந்து திணைக்களமும், காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பணம் காணாமல்போனமை தொடர்பில் குறித்த தொடரூந்தில் பணியாற்றிய தொடரூந்து கட்டுப்பாட்டாளர், சாரதி மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தொடரூந்து பாதுகாப்பு

நாள்தோறும் அப்பல்லோ சென்றேன், ஒரு நாள் கூட அம்மாவை பார்க்க முடியவில்லை: பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஆனால் ஒருநாள் கூட அவரை பார்க்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு மக்களுக்காக நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Posted by - February 8, 2017

தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒன்பது நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கில் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை – கிழக்கு முதல்வர்

Posted by - February 8, 2017

கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இதனை தாம் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் கடந்த 30 வருட கால யுத்தத்தில் அதிக இழப்புக்களை சந்தித்ததோடு தமது வீடுகளையும் இழந்தனர். எனவே, அவர்கள் குடியிருக்க வீடுகள் தேவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவற்றை செய்து கொடுக்க

வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! முடியட்டும் இருளின் ஆதிக்கம்! விடியட்டும் தமிழர் வாழ்வு! – வேல்முருகன்

Posted by - February 8, 2017

பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த தமிழர்தம் எழுச்சி தில்லிச் சக்கரவர்த் திகளை அடிபணியச் செய்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களால் தொடங்கப்பட்ட எழுச்சி மக்கள் திரள் ஆதரவைப் பெற்றதுடன் பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பாய் பங்கேற்கச் செய்தது.

வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் தீவிரநிலை

Posted by - February 8, 2017

வில்பத்து தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிற்கு அமைச்சர் றிசாத் பதியூதீனின் அமைச்சின் ஊடாக சில நபர்களை அழைத்தமை தொடர்பில் தீவிரநிலை ஏற்பட்டுள்ளது. வந்திருந்த நபர்கள் ஊடகங்களுக்கு கேள்விகளை கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பிற்கு மன்னார் பிரதேசத்தை சேர்ந்த சிலர் அழைத்து வரப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017

வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும் ‘எழுக தமிழ்’ பேரணியிலே சிங்களதேசத்திடம் இழந்த உரிமைகளை மீட்பதற்கும் இருக்கின்ற உரிமைகள் பாதுகாப்பதற்கும் ஈழத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல்

Posted by - February 8, 2017

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

Posted by - February 7, 2017

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார். பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் பிள்ளையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தபோதே எதிரில் வந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவருடைய உறவினரான 22 வயதுடைய பெண்ணும், உறவினரான 8 வயது சிறுவனும் படுகாயமடைந்து

பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

Posted by - February 7, 2017

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் பெற்றுள்ளார்.