சசிகலாவின் பகல் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம்
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் பகல் கனவு பலிக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ஜெனிவாவில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
அதிமுக கட்சிக்குள் உட்கட்சி விவகாரம் தற்போது வெடித்து பூதாகரமாக கிளம்பி வருகிறது. பன்னீர் செல்வம் தரப்பினர் அவரது இல்லத்தில் இருந்தும், சசிகலா தரப்பினர் போயஸ் கார்டனிலும் பரபரப்பாக பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பொதுச் செயலாளர் சசிகலா பேசினார். அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் ஆளுநர் காப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ”அதிமுகவிற்கு தோல்வி என்பதே இல்லை, அரசை நிச்சயம் காப்பாற்றுவோம். அனைவருடைய ஒத்துழைப்போடு மென்மேலும்
தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது வீட்டில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘அதிமுக உறுப்பினர்களின் சொத்து. சுயநல சக்திகள் கைப்பற்ற விடமாட்டோம். அது தனிக்குடும்பத்தின் சொத்தாகாது. எந்த குடும்பமும் கைப்பற்ற விடமாட்டோம். அதிமுகவை கைப்பற்றலாம் என்பவர்களி்ன் கனவு நிறைவேறாது’’ என்றார். தனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணியளவில் சந்தித்தார். ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றனர். ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களும் தமிழகத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அதேபோல், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் இளைஞர்கள் ஒருவார காலத்திற்கு
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். அதனால், விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களாக, அல்லது சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களாக என்பது குறித்து
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக நிலைமை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளாதாக கூறப்பட்டது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி
ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். இதனையடுத்து, ஆளுநர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை. இதனிடையே எம்.எல்.ஏ-க்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு அதிமுகவினரும், மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுகவினரும்
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார். இதனையடுத்து, கட்சியின் கொள்கைக்கு முரணாக நடந்து வருவதாக கூறி அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டார். இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், “தன்னை
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் போயஸ் கார்டன் மற்றும் முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் குவிந்து காணப்படுகின்றனர். போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை எம்.பி. நவநீத கிருஷ்ணன் சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு எதிராக பன்னீர் செல்வம் சதி செய்வதாக தெரிவித்தார். மேலும், “தான் மிரட்டப்பட்டதாக தவறான தகவலை பன்னீர் செல்வம் பரப்புகிறார். தான் மிரட்டப்பட்டதாக கூறும் நபர் முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர் என்று சுப்ரமணியன்