விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் – மதுசூதனன் பேட்டி

245 0

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் நேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

அவர் தலைமையில் தான் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.

இதனையடுத்து, கட்சியின் கொள்கைக்கு முரணாக நடந்து வருவதாக கூறி அதிமுக அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதுசூதனன் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், “தன்னை நீக்குவதற்கு முன்பாகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி விட்டேன்” என்றார்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக கட்சியின் சட்ட விதிகளின் படி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும்.  தற்காலிக பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்.

பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை என்றால் அம்மாவையே நிரந்தர பொதுச் செயலாளர் ஆக்குவோம்.  அதிமுகவின் சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்கப்படும்:

மதுசூதனன் அவைத் தலைவர் பதவியை நீக்கிவிட்டு, அந்த பதவியில் சொங்கோட்டையனை சசிகலா நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.