சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக……(காணொளி)

Posted by - February 14, 2017

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக 300 பேருக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்களை சர்தேச தரத்தில் கையாள்வது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டு உணவுப்பொருட்கள் என்பவற்றை

ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்(காணொளி)

Posted by - February 14, 2017

நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு விழாவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. அனைத்து வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ள 800 பேர் அமரகூடிய புதிய கட்டிடத்திற்கு மத்திய மாகாண அமைச்சு 570 இலட்சம் ரூபாவும், தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு 165 இலட்சம் ரூபாவும் செலவு செய்துள்ளனர். இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சிறீலங்கா

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது(காணொளி)

Posted by - February 14, 2017

  நுவரெலியா, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் டின்சின் பதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹற்றன் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

Posted by - February 14, 2017

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான  திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண நகர அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகான தனியார் போக்குவரத்து சபைத்தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்கள், மாவட்ட

மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

Posted by - February 14, 2017

கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது. குறித்த மின்

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

Posted by - February 14, 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபர் ஒருவர், கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அமைக்கப்பட்ட வேலிகளை பிடுங்கி எடுத்ததோடு, வேலி

ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும் ………………

Posted by - February 14, 2017

இன்று மழையின்  மத்தியிலும் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும்  ஏனைய  தலைமைகளால்  எங்களுக்கு உரிய தீர்வை வழங்கமுடியாது என தெரிவித்துள்ளனர்   இராணுவத்திடமிருந்து விரைவில் எமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம்  ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட வடிவத்தை தீவிரப்படுத்தி எமது காணிவிடுவிப்பை துரிதப்படுத்தும் வகையில் பாரிய போராட்ட்ங்களை முன்னெடுக்க  எமக்கு ஆதரவினை வழங்கும்  அனைத்து  சிவில் சமூக அமைப்புகளும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.   எமக்கு இதுவரையில் பல்வேறு

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மீண்டும் தமக்கு – இராணுவத்தினர்

Posted by - February 14, 2017

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர்.்இதில் மக்களுன் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை விடுத்து குறித்த பிரதேச மக்கள் நீண்டகாலமாக பல போராட்டாங்களை நடாத்தி வந்தனர். இதன் பயனாக அப்பிரதேசத்தின் சில பிரதேசங்கள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டபோதிலும்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம்

Posted by - February 14, 2017

ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் இன்று கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நேற்றிரவு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார். இந்த நிலையில், இன்று கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ சட்ட கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவிக்கவுள்ளது. வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை கௌரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் அளிக்கப்படவுள்ளது.