கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்ய சட்ட மா அதிபர் அனுமதி, வெகு விரைவில் கைது ?

Posted by - November 21, 2017

கடந்த அரசாங்கத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம்

பொலிஸ் அதிகாரி தற்கொலை : உயிரிழந்த அதிகாரிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

Posted by - November 21, 2017

முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை முல்லேரியா பொலிஸ் நிலையத்தின் பரிசோதகர் பிரிவு அதிகாரிகளின் வதிவிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பிரேமசிறி என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கு

இவ்வருடத்தில் 678 பேர் எயிட்ஸ் நோயினால் இறப்பு

Posted by - November 21, 2017

இவ்வருடத்தின் இரண்டாவது காலப்பகுதியில் எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 678 என்று தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே சுட்டிக்காட்டியுள்ளார். HIV வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நேற்று ஆரம்பமானது. டிசம்பர் முதலாம் திகதி இடம் பெறும் எயிட்ஸ் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முதலாவது நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்

காமினி செனரத் பிணையில் விடுதலை

Posted by - November 21, 2017

முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர் படை பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் லங்கா ஜயரத்ன மூலம் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி திணைக்களத்திற்கு சொந்தமான 4 பில்லியன் ரூபா பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத் மற்றும் குறித்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான பியதாச குடாபாலகே, நீல் ஹபுஹின்ன ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை

இன்று மாலையும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

Posted by - November 21, 2017

நாட்டின் பொரும்பாலான மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க வந்த அனைத்து தலைவர்களையும் விசாரிக்க வேண்டும்- தீபாவின் கணவர்

Posted by - November 21, 2017

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க வந்த முக்கிய தலைவர்களை விசாரிக்க வேண்டும் எனக் கோரி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபாவின் கணவர் மாதவன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மஹாலில் இயங்கி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் கணவர் க.மாதவன், விசாரணை ஆணைய அலுவலகத்தில் நேற்று ஆஜராகி,

காந்தியின் படைப்புகள் அனைத்தும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

Posted by - November 21, 2017

காந்தியின் படைப்புகள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். காந்தி கல்வி நிலையம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள 11,419 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் நேற்று நடந்தது. தமிழ் ஆட்சி மொழி

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை-அர்ஜுன

Posted by - November 21, 2017

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக குற்றப்புலானாய்வுப் பிரிவுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்தார். பொய்ப் பிரச்சாரம் செய்வோர் நீதியின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எந்த இடத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் சில எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் தாமதத்தினால் எற்பட்டுள்ள எண்ணெய்த் தட்டுப்பாட்டை

39 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 21, 2017

டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 39  மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள்  வழக்கம்போல் இன்று ( 21.11.2017) காலை கற்றல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி டயகம பகுதியில் இடம்பெற்ற ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட சிலர் இவ்வாறு நோய்வாய்குட்பட்டமை தெரியவந்துள்ள நிலையில்  சுகாதார பரிசோதகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் டயகம வைத்தியசலையில்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரு சீனப் பெண்கள் கைது

Posted by - November 21, 2017

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகை சிகரெட்டுகளுடன் இரு சீனப் பெண்களை விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இரு பெண்களும் சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவிமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை கொண்டுவந்த போதே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 61 வயது மற்றும் 48 வயதான சீனப் பெண்களாவர். குறித்த