கிளாலியில் மணல் அகழ்வை தடுக்க கோரி கூரை மீது ஏறி போராட்டம்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றார்.

