டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

263 0

மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி  என்ற சிறுமியே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சிறுமி கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment