ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பு- சரத்

Posted by - November 27, 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதனால் மகிழ்ச்சியடைய முடியாது. எதிரணியில் பலவீனமாக உள்ள நபர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாம் தனித்து ஆட்சியமைக்கும் வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் பிரதேசத்தல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேங்காய்க்கான நிர்ணய விலை – வர்த்தமானி இன்று

Posted by - November 27, 2017

தேங்காய்க்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை இன்று திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யக்கன் டாவல தெரிவித்துள்ளார். நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேய்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அதிகாரம் இதன் பின்னர் கிடைக்கும் என்று தலைவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

Posted by - November 27, 2017

சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் 12.00 மணிவரை வழங்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார். மேலும் 93 ஆவணங்களுக்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு

முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயம்

Posted by - November 27, 2017

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய நிறைவேற்றுக் குழுவினருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் எம்.எம்.அமீன் தலைமையில் கடந்த சனியன்று முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டையில் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். கிந்தோட்டை அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்துடனான கலந்துரையாடலில் பதிக்கப்பட்டடோர் விபரம், நட்டஈட்டை பெறுவதற்கான வழிகள், சட்ட ஆலோசனைகள் குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும்-நிமல் சிறிபால டி சில்வா

Posted by - November 27, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். காலி அபராதுவ நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய புகையிரத நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்துபோட்டியிடுவதனால் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் எந்தவித சிக்கல்களும் ஏற்படமாட்டாது என்றும் அமைச்சர் சகுறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில்

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

Posted by - November 27, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற அணியின் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடம் பல்வேறு யோசனைகளை முன்வைக்கப்பட்டிருந்தன. இதேவேளை, குறித்த யோசனைகள் சம்பந்தமாகவும் உள்ளூராட்சி

வாகன விபத்தில் இருவர் பலி

Posted by - November 27, 2017

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் சாவகச்சேரி பூனாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார்

ஆவா கும்பலின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

Posted by - November 27, 2017

குற்றச்செயல் ஒன்றிற்காக வாள் ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆவா கும்பலின் இரு உறுப்பினர்கள் இன்று அதிகாலை சாவகச்சேரி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்யும் வேளையில் குறித்த நபர்கள் வைத்திருந்த வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு டிசம்பர் 14ம் திகதி நிறைவு

Posted by - November 27, 2017

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உடனடி தடையேதும் இல்லாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவது என கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது. இதற்கமைவாக இன்றையதினம் வேட்புமனுக்களை பொறுப்பேற்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தலுக்கான கட்டுப்பணம்