அமெரிக்காவை அச்சுறுத்தும் வடகொரியாவின் மற்றொரு பாரிய ஏவுகணை சோதனை

Posted by - November 29, 2017

வட கொரியா முன்பு ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதுடன், உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வட கொரியாவின் இந்த ஏவுகணை 4,500 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு பறந்ததாக தென் கொரியா ராணுவம் கூறியுள்ளது. வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளவிலான

சத்யம் திரையரங்குகள், மார்க், பட்டேல் குழுமங்களுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை- சசிகலா குடும்பத்தினரின் பினாமிகளா என ஆதாரம் தேடும் அதிகாரிகள்?

Posted by - November 29, 2017

சத்யம் திரையரங்குகள், மார்க், பட்டேல் குழுமங்களுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நாளில் தீவிர சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தின் பினாமிகள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்கவே இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சசிகலா, தினகரன், திவாகரன் குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். 5 நாட்கள் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனை,

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் நலன் காக்க வருமான வரியில் கூடுதல் சலுகைகள்: வாசன் வலியுறுத்தல்

Posted by - November 29, 2017

அரசு ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், மிகவும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான வருமான வரியில் அதிக சலுகைகள் வழங்கி அவர்கள் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுவோரின் வயது 60-க்கு மேல் 80 வரை இருந்தால் அவர்களை மூத்த குடிமக்கள் என்றும், 80 வயது மற்றும் அதற்கு மேல் இருந்தால் அவர்களை மிகவும் மூத்த குடிமக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கோத்­தாவை கைது செய்ய அனு­ம­திப்­பதா? இல்­லையா? : இன்று தீர்­மா­னிக்கும் நீதி­மன்றம்

Posted by - November 29, 2017

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­ப­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா? இல்­லையா என மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இன்று தீர்­மா­னிக்­க­வுள்­ளது. டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை  தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை விசா­ர­ணைக்கு

மலையகப் பகுதிக்கான புகையிரதப் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 29, 2017

ஓஹிய  இதல்கஸ்ஹின்ன இடைப்பட்ட பிரதேசத்தில் புகையிர வீதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் மலையகப் பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் பகுதிக்கான சில புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் கைது

Posted by - November 29, 2017

ஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் வசம் இருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 29, 2017

மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

Posted by - November 29, 2017

இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்கால  சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வவுனியா – மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை இராணுவப் படைக்குச் சொந்தமான ரீ 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றையும், 15 துப்பாக்கி ரவைகளையும், 4 துப்பாக்கி குண்டு கவசங்களையும் களவாடி பின்னர் அவற்றைப் பயன்படுத்தி

பிரத்தியேக வகுப்பிற்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றம் நிரூபனம்

Posted by - November 29, 2017

வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்  குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து இறுதி தீர்ப்பை அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து  ” இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு இலவசமாக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு எதிராக தன்னை அவர்