அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் குழப்பம் இல்லை: வைத்திலிங்கம் எம்.பி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை என வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் எந்தவித குழப்பமும் இல்லை என வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தை சுற்றுலாத்துறையுடன் தொடர்புபடுத்த முடியுமாயின் சுற்றலாத் துறையை மேம்படுத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை துறைமுகம் சார்ந்த நடவடிக்கைகளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்து தொடர்பான தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்த அவர்,
இரட்டை இலை இருக்கும் இடமே உண்மையான அ.தி.மு.க. என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக உதயகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரான உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்தர் ஆகிய இருவரையும் வடக்கிலிருந்து இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை வடபிராந்தி இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர் இதனால் இன்று யாழ் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை காரைநகர் மற்றும் கோண்டாவில் ஆகிய மூன்று
கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆய்வில்.20 பொது அமைப்புக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் க.தவலிங்கம் தலமையில் இடம்பெற்ற கருத்துப் பதிவின்போதே குறித்த 20 அமைப்புக்களும் தமது கருத்தை பதிவு செய்து கொண்டனர். இதில் அதிக அமைப்புகள் தமது கருத்துப் பகிர்வின்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 4 மாகாண சபை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகளே அமையப்பெறும் எனவே தொகுதிகளிற்கு தனித் தனியான பெயர்களை சூட்டுவதனால் ஏனைய
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முஸ்லிம் இளைஞன் விக்ரம் உள்ளடங்களாக மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். “சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெறுகின்றன. அவர்களுடன்
காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்குகனடாவின் அழுத்தம் அவசியம். அந்த நாட்டுத் தூதுவரிடம் வலியுறுத்தினார் யாழ். ஆயர் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்”இவ்வாறு தன்னை இன்று சந்தித்த கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் வலியுறுத்தினார் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார். “போர் இடம்பெற்ற
தமிழகம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி. பட்டிணம் கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்திய வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த கைது இடம்பெற்றது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 2.5 கோடி இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தோண்டி பகுதியில் 16 கிலோ வரையான தங்கம்
சிரியா உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று தொடங்குகிறது. சிரியா நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைத் சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்து வருகின்றன. இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் அந்த நாட்டின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை போரில்
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள மவுண்ட் அகுங் எரிமலை சில நாட்களுக்கு முன்பு வெடித்துச் சிதறி கரும்புகை, சாம்பல் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது. சுமார் 3