இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் (காணொளி)

Posted by - November 30, 2017

இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டாரீஸ், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு

Posted by - November 30, 2017

கன்னியாகுமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறினால், தனி நாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் ஏற்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 30, 2017

நல்லாட்சி அரசாங்கம், அதிகாரப் பகிர்வை வழங்கத் தவறினால், தனி நாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் ஏற்படும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“என் மீது கண் வேண்டாம்” இனவாதத்தை விமர்சித்த பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்

Posted by - November 30, 2017

அமெரிக்க வெள்ளை இனவாத குழுவின் சில வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே-க்கு டொனல்ட் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !

Posted by - November 30, 2017

மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையினால் குறித்த மின்சார

இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலையே தொடரும் -வானிலை அவதான நிலையம்

Posted by - November 30, 2017

இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடும் மழை, பலத்த வேகத்துடனான காற்று என்பன நாடு முழுவதும் நிலவும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் கரையோரப் பகுதிகளில் கடல்

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 30, 2017

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை பதுளை பிரதேசத்தில் அபாயம் நிலவும் பிரசதேசங்களிலிருந்து வெளியேறுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளன.

புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 30, 2017

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதைகளில் மண்சரிவு மற்றும் மரம் முறிவுகள் ஏற்பட்டு புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய களனிவெளி புகையிரத வீதி, அவிசாவளை தொடக்கம் கொட்டாவ வரையிலான புகையிரத வீதியில் பல இடங்களில் மரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை தொடக்கம் நானுஒயா வரையிலான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை ஆகிய மாவட்டங்கள் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - November 30, 2017

மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதனை அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிக மழை காரணமாக சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது. ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வீதி வழுக்குவதற்கு

சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - November 30, 2017

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.