பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு!
பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவரைக் காணவில்லை எனத் தேடியபோது இன்று அதிகாலை 1.00 மணியளவில் அயலில் உள்ள கிணற்றில் இருந்து

