அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான ஒரே சக்தியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே… பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.
தமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை. அதேபோல் தாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆனந்தசங்கரியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திக்க பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேட்புமனுவில் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளது. அக் கட்சியின் பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆறுமுக தொண்டமான் தலைமையில் இந்த கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி லுத்தினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தினரின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மக்களுடன் சுமூகமான உறவைப் பேணுதல், இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குதல், என்பவற்றை தவிர்த்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இராணுவத்தினர் தவிர்க்க வேண்டும்
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, கம்புறுப்பிட்டிய, மீற்ரியாகொட மற்றும் மடுள்சீம ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதுவரை 16 மாவட்டங்களில் ஒரு லட்சத்து
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியில் இருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் நிறையுடைய 19 இலச்சத்து 19,56,570 ரூபா பெறுமதியான
சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் இன்று முற்பகல் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம விகாரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. விகாரைக்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி அமரபுர தர்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரரை சந்தித்து பூஜைப் பொருட்களை அன்பளிப்பு செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். ஸ்ரீ வஜிராராம தஹம் பாடசாலையின் சங்கைக்குரிய மீகொட சுகித தேரரினால் சமய உரை
மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்தும் நீடிக்க, தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று காலை 9.30 முதல் நாளை காலை 9.30 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்பிரகாரம், இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை,