கோத்தாபாயவின் கைதுக்கு எதிரான தடை நீடிப்பு

Posted by - December 6, 2017

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவினை டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை தொடர்பில் பொது உடமை சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், குறித்த விடயம் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்பதால் விசாரணைகளைத் தற்காலிகமாக கைவிடுமாறு கோத்தாபய ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கெதிரான சட்ட

தேர்தல்கள் தொடர்பிலான சிரேஷ்ட DIG யாக விக்ரமரத்ன நியமனம்

Posted by - December 6, 2017

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக பிரிவு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சி.டீ.விக்ரமரத்ன கடமையாற்றுவதுடன் மேலதிகமாக அவருக்கு தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா

GMOA தலைவரின் வேண்டுகோள் நிராகரிப்பு

Posted by - December 6, 2017

நீதிமன்றத்தை அவமதித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்குமாறு கோரிய வேண்டுகோள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வேண்டுகோள் அனுருத்த பாதெனியவின் சட்டத்தரணி மூலம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி கற்கைநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சலுகை கடன் வசதி

Posted by - December 6, 2017

அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெட்டுப்புள்ளி முறைமையின் மூலம் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காத மாணவர்களுக்கு பட்டங்களை பெற்றுக் கொடுக்கும் அரச சார்பற்ற உயர் கல்வி நிர்வனங்களில் பட்டப்படிப்பு கற்றைநெறிகளை தொடர்வதற்காக ரூ.800,000 உயரிய கடன் தொகைக்கு உட்பட்டு, வட்டியற்ற சலுகை கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதற்கு சமாந்தரமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிர்வனங்களில் கல்வியியல் பட்டப்படிப்பினை தொடர்வதற்காக வேண்டி

ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வடகொரியா பயணம்

Posted by - December 6, 2017

வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் அமைப்புடன் கூட்டணி வைக்க தயார் – முஷரப் அறிவிப்பு

Posted by - December 6, 2017

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புடன் கூட்டணி வைக்க தயார் என பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்விஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?: முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு முறியடித்த போலீஸ்

Posted by - December 6, 2017

பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவை கொல்ல சதி திட்டம் வகுத்ததாக இருவரை லண்டன் நகர போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

ஊக்கமருத்து சர்ச்சை எதிரொலி: குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு ‘ரெட் கார்ட்’

Posted by - December 6, 2017

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி பதக்கம் வென்றது பலமுறை நிரூபிக்கப்பட்டதால், அடுத்தாண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந்த நாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - December 6, 2017

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.