ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தின் மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. தெஹிவளை – கல்கிஸை, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கே கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

