நிலையவள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இறுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய முல்லைத்தீவு…
மேலும்

கிளிநொச்சி மாணவி ஒருவரால் சிவநகர் சனசமூக நிலையத்திற்கு நூல்கள் அன்பளிப்பு.

Posted by - December 20, 2016
கரைச்சி சிவநகர் சனசமூக நிலையத்தின் நூலகத்திற்கு, கொழும்பு கொள்ளுப்பிட்டி மெதடிஸ் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவி நிருத்திகா சிறிதரன் தனது கற்கையின் ஒரு பகுதியாக, சமூகச் செயற்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி நூல்களை கையளித்துள்ளார். குறித்த நிகழ்வு கரைச்சி சிவநகர்…
மேலும்

கிளிநொச்சயில் தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது(படங்கள்)

Posted by - December 20, 2016
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் ஊடாக தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயனாளிகளுக்கு, தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் தபேந்திரன் தலைமையில் இன்று காலை…
மேலும்

நுவரெலியா எல்ஜீன் தோட்டப்பகுதியில், தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 20, 2016
நுவரெலியா ஹட்டன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப்பகுதியில் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க கோரி குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று…
மேலும்

லசந்த விக்ரமதுங்கவிற்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது(குரல் பதிவு)

Posted by - December 20, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம்…
மேலும்

தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பால் வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

Posted by - December 20, 2016
நாடு முழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் 14 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 வருடங்களாகத் தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி 2 நாட்கள் பணியை புறக்கணித்துள்ளனர். பணிப்புறக்கணிப்பால்…
மேலும்

வவுனியாவில் வெடிபொருட்களுடன் மூவர் கைது(காணொளி)

Posted by - December 20, 2016
வவுனியாவிற்கு கொண்டு வர தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமின்றி மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி இந்த வெடிபொருட்கள் கொண்டு வரப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியின் உதவியுடனேயே இந்த வெடிப்பொருட்கள் வவுனியா நோக்கி…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாக்குவாதம் (காணொளி)

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்ட வேண்டும் என வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது தங்களுடைய…
மேலும்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பம் (காணொளி)

Posted by - December 20, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பித்துள்ளதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி வை.திவாகர் தெரிவித்துள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் இன்று ஆரம்பம்(காணொளி)

Posted by - December 20, 2016
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில், தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க…
மேலும்