நிலையவள்

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடிவிக்ககோரி ஐனாதிபதிக்கு மகஜர்

Posted by - April 12, 2017
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் புதுவருடத்திற்கு முன்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றைய தினம் மகஜர் ஒன்றினை பொது அமைப்புக்கள் இணைந்து அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள…
மேலும்

அனைத்து உறவுகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை

Posted by - April 12, 2017
காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை வலுப்படுத்த, அக்கறை உள்ள அனைத்து உறவுகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் வடக்கில் பல்வேறு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கான தீர்வை வேண்டி போராட்டங்களை முன்னெடுத்து…
மேலும்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய 3 இடங்கள், செப்டம்பர் முதல் அமுல்

Posted by - April 12, 2017
அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு கொழும்பு நகரில் விசேடமாக மூன்று இடங்களை அறிமுகம் செய்வதற்கும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அதனை சட்டமாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாதவிதமாக இந்த இடங்களை…
மேலும்

யை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 12, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு சுமார் 95,000 வாகனங்கள் அதிவேகப் பாதையால் பயணித்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.…
மேலும்

விற்பனை செய்த மூவர் மருதானையில் கைது

Posted by - April 12, 2017
போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகத்தில் மூவர் மருதானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பிராந்திய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை பகுதியில் வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டுசென்ற நபரொருவரை கைது செய்து மேற்கொண்ட…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து

Posted by - April 12, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் மற்றும் அவரது சாரதி ஆகியோர்…
மேலும்

நாளையும், நாளை மறுதினமும் மதுபானசாலைகள் மூடப்படும்- அரசாங்கம்

Posted by - April 12, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களான நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம்…
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது

Posted by - April 12, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மாத்தறை,கொடகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக பணமோசடி சம்பவம் தொடர்பில் பல வழக்குகள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பணம் பெற்றுக்கொண்ட வங்கிப் புத்தகங்கள், 3 கையடக்கத் தொலைபேசிகள்…
மேலும்

காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாயும், மகனும் காயம்

Posted by - April 12, 2017
அம்பாறை – சமகிபுர பிரதேசத்தில் காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாய் மற்றும் மகனுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்க சங்கிலி கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹஓய காவற்துறை அதிகாரிகள் சிலர் நேற்று…
மேலும்

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாக சம்பந்தன் மீது குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து…
மேலும்