வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மாத்தறை,கொடகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக பணமோசடி சம்பவம் தொடர்பில் பல வழக்குகள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்ட வங்கிப் புத்தகங்கள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனி ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பட்டப்பட்டுள்ளது.
மோசடி செய்த பணத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

