நிலையவள்

எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளத்தைக்கொண்டதும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகவும் காணப்படும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள…
மேலும்

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை (காணொளி)

Posted by - May 25, 2017
  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் நேற்றைய தினம் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்துடன் சென்று மணலை ஏற்றிவந்து வீட்டில்…
மேலும்

கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

Posted by - May 25, 2017
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். இக்கிராம மக்கள் 1999ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டின் பின்னரே மீள்குடியேறிய போதும் இக்கிரமத்தின் பிரதான வீதி…
மேலும்

மங்களவின் கடமைகளை பொறுப்பேற்ற ரவி

Posted by - May 25, 2017
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேவேளை,புதிய நிதியமைச்சராக…
மேலும்

முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ வைத்து முன்னேற முடியாது – விஜய உந்துபிடிய

Posted by - May 25, 2017
திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்விதம் முயற்சித்து முன்னேற வேண்டுமே தவிர கடைகளுக்கு தீ வைத்து முன்னேற முடியாது என்ற செய்தியை சமூகமயப்படுத்த வேண்டியதே காலத்தின் தேவை என்று மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜய…
மேலும்

ஊடக அமைச்சின் மூன்று நிறுவனங்களை தனக்கு தருமாறு கயந்த கோரிக்கை

Posted by - May 25, 2017
ஊடக அமைச்சின் கீழ் இயங்கி வரும் மூன்று நிறுவனங்களை தனது புதிய அமைச்சின் கீழ் கொண்டு வருமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லாட்சி அமைச்சின் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்க அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது காணி மற்றும் பாராளுமன்ற…
மேலும்

ரத்துபஸ்வல சம்பவம்: பிரிகேடியர் குணவர்தன கைது

Posted by - May 25, 2017
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கோரிப் போராடிய பிரதேசவாசிகள் மீது தாக்குதல் நடத்த ஆணை பிறப்பித்ததாகக் குறிப்பிடப்படும் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச்…
மேலும்

ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் களத்தில்

Posted by - May 25, 2017
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்துதல், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசுதல் என்பன தொடார்பில் இவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…
மேலும்

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - May 25, 2017
தெமட்டகொட பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்…
மேலும்

மஹிந்தாநந்தவிற்கு பிணை

Posted by - May 25, 2017
முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தநந்த அழுத்கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், பொரளை – கிங்ஸிலி வீதியில் கணக்கில் வராத 27 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அவரால் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…
மேலும்