நிலையவள்

யூன் 6 ம் திகதி கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன- கல்வி செயலர்

Posted by - May 31, 2017
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித , விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த 25, 26ம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தகுதியடைந்த பட்டதாரிகளிற்கான நியமனம் யூன் 6ம் திகதி வழங்கப்படவுள்ளதா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…
மேலும்

கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட சில பட்டதாரிகள் நியமனங்களை பொறுப்பேற்கவில்லையென குற்றச்சாட்டு

Posted by - May 31, 2017
வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 3ம் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 549 பட்டதாரி  ஆசிரியர்களில் 516பேர் மட்டுமே  நியமனங்களைப் பொறுப்பேற்றுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். வட மாகாணப் பாடசாலைகளிற்கான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கடந்த…
மேலும்

ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள்

Posted by - May 31, 2017
101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன் குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. இதற்கு எதிராக ஆர்மேனியா மக்கள் உலகளாவிய ரீதியில் போராடிவருகின்றனர். சர்வதேச…
மேலும்

மன்னாரில் புதிய விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 31, 2017
மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமத்தில் சூசையப்பர் விளையாட்டரங்கிற்கான   44 மில்லியன் ரூபா செலவிலான புதிய விளையாட்டரங்கிற்கு நேற்று முன்தினம் அதிக கல் நாட்டி வைக்கப்பட்டது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சிடம் சூசையப்பர் விளையாட்டுக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு  விடப்பட்ட கோரிக்கையின் பிரகாரம்…
மேலும்

சகல தேசிய பாடசாலைகளும் நிவாரணம் சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படும்

Posted by - May 31, 2017
அனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். இதன்போது நிதி வழங்க வேண்டாம் என்று உதவி வழங்குபவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ள கல்வியமைச்சர் ஆடைகள் வழங்குவதாயின் புதிய ஆடைகளை…
மேலும்

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும்

Posted by - May 31, 2017
இன்றையதினமும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் காலி – மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் அதிகரிகத்த காற்று வீசும் என்றும்எதிர்வு கூறப்பட்டுள்ளது
மேலும்

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு(காணொளி)

Posted by - May 30, 2017
மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில், தேசிய ஊடக கற்கை நெறிகளுக்கான செயலமர்வுகளை…
மேலும்

நுவரெலியா தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 30, 2017
நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் 55 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த பெண் அண்மையில் பெய்த மழையினால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு…
மேலும்

வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக செயற்படுவதாக தெரிவித்து ஒரு தாயும் மகனும்….(காணொளி)

Posted by - May 30, 2017
வவுனியா, தாண்டிக்குளம், முதலாம் ஒழுங்கைப் பகுதியில் வசிக்கும் வாகன உரிமையாளர் ஒருவரின் தான்றோன்றித்தனமான செயலினால் அவ் ஒழுங்கையில் வசித்த பலருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ் ஒழுங்கையில் வசிக்கும் பலர் கடிதம் ஒன்றினை எழுதி வவுனியா நகரசபை, பிரதேச செயலாளர், போக்குவரத்து…
மேலும்

கிளிநொச்சி நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருக்கிறன-சி.சிறிதரன் (காணொளி)

Posted by - May 30, 2017
  கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.;சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். நகர…
மேலும்