மன்னாரில் புதிய விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

446 0
மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமத்தில் சூசையப்பர் விளையாட்டரங்கிற்கான   44 மில்லியன் ரூபா செலவிலான புதிய விளையாட்டரங்கிற்கு நேற்று முன்தினம் அதிக கல் நாட்டி வைக்கப்பட்டது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சிடம் சூசையப்பர் விளையாட்டுக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு  விடப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த மைதானத்தினை நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானமாக அமைப்பதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டது. இதன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின் பிரகாரம் மேற்படி புனரமைப்பிற்காக 44 மில்லியன் ரூபா வேண்டும் எனக் கண்டறியப்பட்டது.
இதன் பிரகாரம் குறித்த நிதியை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் தற்போது குறித்த நிதி விடுவிக்கப்பட்டது. இதனைஉயடுத்து இதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் புனித செபஸ்தியார் ஆலய பங்குத் தந்தை செட்டிசோசை தலமையில் இடல்பெற்றது. இதில் பிரதான அடிக்கல்லினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் நாட்டிவைத்தார். குறித்த நிகழ்வில் வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் உறுப்பினர் சிராய்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.