கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட சில பட்டதாரிகள் நியமனங்களை பொறுப்பேற்கவில்லையென குற்றச்சாட்டு

321 0
வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 3ம் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 549 பட்டதாரி  ஆசிரியர்களில் 516பேர் மட்டுமே  நியமனங்களைப் பொறுப்பேற்றுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
வட மாகாணப் பாடசாலைகளிற்கான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட 549  பட்டதாரிகளில் இருந்து வடக்கின் 5 மாவட்டப் பாடசாலைகளில் நிலவிய வெற்றிடங களிற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட  பட்டதாரிகளிற்கு வழங்கப்பட்ட பாடசாலைகளின் பின்னரும் உண்மையான காரணங்களின்  அடிப்படையில் சில  பாடசாலைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டதில் தூர தேச நியமனம் என்ற அடிப்படையில் 38 பட்டதாரிகள் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. இதனால் அவர்கள் தமது அரச நியமன சந்தர்ப்பத்தினை இழக்கின்றனர்.  நீண்ட போராட்டத் நீண்ட முயற்சிகளின் பின்னர் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்காக விரைவாக நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு 549 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கியிருந்தும் 38 பட்டதாரிகள் அந்தச் சந்தர்ப்பத்தினை தவற விட்டுள்ளனர்.
இதன் காரணத்தினால் நாம் மீண்டும் இதற்கான முயற்சிகளிலர ஈடுபடும் தேவை எழுந்துள்ளது. என்றார்.