நிலையவள்

135 நாட்களை எட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

Posted by - July 5, 2017
135 நாட்களாக தாங்கள் போராடிவரும் நிலையில் இதுவரையில் நம்பிக்கை தரக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத மத்திய, மாகாண அரசுகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார்கள் என்பது தமக்கு கேள்வியாகவே இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.…
மேலும்

புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப அமைதியான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - July 5, 2017
புலம் பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழலை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு…
மேலும்

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேர் கைது

Posted by - July 5, 2017
திருகோணமலை விலாங்குளம் மற்றும் கண்ணியா காட்டுப் பகுதிக்குள் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணல் ஏற்ற பயன்படுத்திய மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள்…
மேலும்

புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக தொழில் புரியும் தரப்பினர் பாதிப்பு-பந்துல குணவர்தன

Posted by - July 5, 2017
நாடாளுமன்றத்தில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக, நாட்டின் தொழில் புரியும் தரப்பினர் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
மேலும்

A/L மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதத்தில்

Posted by - July 5, 2017
இம்முறை கல்விப் பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைகள் முறையே ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன. 2ஆயிரத்து 230 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3…
மேலும்

3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Posted by - July 5, 2017
களனி, நுங்கமகொட பிரதேசத்தில் 3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர், இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் களனி பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்தது…
மேலும்

தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைகின்றது- மரியநாயகம் இமானுவேல் (காணொளி)

Posted by - July 4, 2017
தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைவதாகவும், தென்னிந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்த வேண்டும் எனவும் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி மரியநாயகம் இமானுவேல் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம்…
மேலும்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், மரம் அரியப் பயன்படுத்தப்படும்  நவீன இயந்திரம் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - July 4, 2017
மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் ஒன்று, நேற்றைய தினம் சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டக் காட்டுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலையில், பயன்படுத்தப்பட்ட மரம் அரிவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.…
மேலும்

மூன்று அரச மருத்துவ பல்கலைக்கழகங்களை உருவாக்க திட்டம்

Posted by - July 4, 2017
அடுத்த வருட இறுதிக்குள் மூன்று அரச மருத்துவ பல்கலைக்கழகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குருநாகல், இரத்தினபுரி மற்றும் மொரட்டுவ பகுதியில் இந்த மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், குருநாகல் மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள்…
மேலும்

பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Posted by - July 4, 2017
நாடளாவிய ரீதியாக நாளைய தினம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து இந்த கோரிக்கை…
மேலும்