தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைகின்றது- மரியநாயகம் இமானுவேல் (காணொளி)

267 0

தென்னிந்திய இழுவைப்படகுகளாலேயே கடல் வளங்கள் அழிவடைவதாகவும், தென்னிந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்த வேண்டும் எனவும் குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி மரியநாயகம் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களால் மேற்கொள்ளப்படும் இழுவை மடித்தொழில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், மரியநாயகம் இமானுவேல் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரில் இழுவை மடித்தொழிலலை மேற்கொள்ளும் குறிப்பிட்ட தொழில் மையமாக சேற்றுக் கடல் பிரதேசங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

சேற்றுக் கடல் பிரதேசங்களில் இறால் இனம் காணப்படுகிறது.

இச்சேற்று நிலங்களிலேயே குருநகர் இழுவை மடித் தொழிலாளர்களும், மன்னார் பேசாலையிலுள்ள குறிப்பிட்ட சில மீனவர்களும் மாத்திரமே இறால் அறுவடையில் ஈடுபடுகின்றனர்.

ஏனைய கடற்பிரதேசங்களில் இழுவை மடித் தொழில் செய்யப்படுவதில்லை.

எனவே குருநகர் இழுவை மடித்தொழிலால் கடல் வளம் அழிக்கப்படுகிறது என்பது உண்மைக்குப் புறம்பானது என்று, குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் பிரிதிநிதி மரியநாயகம் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தொழிலை நிறுத்துவதன் மூலம் வடக்கில் 600 குடும்பங்களும், குருநகரில் 300 குடும்பங்களும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment