நிலையவள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே ஆசனப் பங்கீடு சமூகமாகத் தீர்வு!!

Posted by - December 14, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முன்முயற்சியுடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,…
மேலும்

முல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா!

Posted by - December 14, 2017
300 கிலோவிற்கும்அதிகமானகேரளக்கஞ்சாவத்தளைஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக…
மேலும்

விடுவிக்கப்பட்ட முகமாலையில் மக்கள் விரைவில் குடியேற்றம்

Posted by - December 14, 2017
மிதிவெடிகள் அகற்றப்பட்ட கிளிநொச்சி – முகமாலை பகுதி, கடந்த 12ம் திகதி பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீளவும் அப் பகுதிகளுக்கு சென்று தமது காணிகளில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, அப் பகுதியில் இருந்து…
மேலும்

லிந்துலை பகுதியில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

Posted by - December 14, 2017
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என…
மேலும்

தேர்தல் காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்ய பணிப்புரை-சிறிசேன

Posted by - December 14, 2017
தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை…
மேலும்

மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - December 14, 2017
மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டு வரை இவ்வாறு அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தேவையான…
மேலும்

இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்து

Posted by - December 14, 2017
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது. டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று (14) மதியம் இவ்விபத்து சம்பவித்துள்ளது. நோர்வூட் பகுதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி பஸ்ஸொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை

Posted by - December 14, 2017
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இவ் வழக்கானது விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி உத்தரவானது நீதிபதி…
மேலும்

முத்துமாரியம்மன் ஆலயம் உடைத்து திருட்டு : லிந்துலையில் சம்பவம்

Posted by - December 14, 2017
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெளலினா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் விக்கிரகத்திற்கு அணிவித்திருந்த பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்களும் உண்டியல் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு பூஜை முடிந்தவுடன் நடை சாத்திய பின்னரே கொள்ளைச் சம்பவம்…
மேலும்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

Posted by - December 14, 2017
ஊனம் உடலில் இல்லை மற்றவர்களின் மனதில் என்பதை உலகறிய எடுத்துக் கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம் என்பதற்கமைய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மிகவும் சிறப்ப்பாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை  காலை 10 மணியளவில் வாழ்வகம்…
மேலும்