நிலையவள்

ஹெரோயின் வைத்திருந்த தம்பதி உள்ளிட்ட மூவர் கைது

Posted by - December 27, 2017
இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 4 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இன்று அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்

மட்டில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை

Posted by - December 27, 2017
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – பெரியகல்லாறு பகுதியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 07.00 மணியளவில் பெரியகல்லாறு ஊர் வீதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இருவருக்கும்…
மேலும்

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

Posted by - December 27, 2017
தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை…
மேலும்

மத்திய வங்கி ஊழல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்-ஜனாதிபதி உறுதி.!

Posted by - December 26, 2017
அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர்  மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என அரச தொழில்முயற்சி இராஜாங்க…
மேலும்

களனி தொகுதி ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு

Posted by - December 26, 2017
களனி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று (26) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். களனி…
மேலும்

வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இல்லாதோர் வாக்களிக்க முடியாது – எம்.எம். மொஹமட்

Posted by - December 26, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பில் வாக்காளருக்கான பெயர் இடம்பெறாதோர் வாக்களிக்க முடியாதென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று காலை அரசாங்க…
மேலும்

கண்டி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளராக முஹம்மது ஷபீ நியமனம்

Posted by - December 26, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ஷபீ நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.
மேலும்

வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதில் தடைகள் ஏற்படலாம் – தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு

Posted by - December 26, 2017
நாளை (27) நாடு பூராகவும் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறையை முறைமைப்படுத்துவதாக அதிகாரிகள் பல தடவைகள் கூறினாலும், அதனை செயற்படுத்தாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…
மேலும்

கட்சி செயலாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு-மஹிந்த

Posted by - December 26, 2017
அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு நாளை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, நாளை மறுதினம் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடாத்துவது தொடர்பான சட்ட…
மேலும்

ராஜகிரிய சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்பாடு

Posted by - December 26, 2017
ராஜகிரிய, வெலிக்கடை சந்தியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் மேம்பால நிர்மாண பணிகளுக்காக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பகுதிக்கு வருவது, கொழும்பிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும்