நிலையவள்

தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்தில்

Posted by - May 20, 2018
தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும்

காலி முகலிடத்தில் நபரொருவர் தற்கொலை

Posted by - May 20, 2018
காலி முகத்திடல் கடற் பிரதேசத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிடிய – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சடலம் கொழும்பு…
மேலும்

சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

Posted by - May 20, 2018
ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் சட்டவிரோத 1220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) இரவு குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக ஹட்டன்…
மேலும்

விபத்தில் ஒருவர் பலி

Posted by - May 20, 2018
சிலாபம், வெல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்சகப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது

Posted by - May 20, 2018
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை அங்குலானை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அங்குலானை பகுதியில் உள்ள பல வீடுகளில் பொருட்களை திருடியுள்ளதாகவும் மேலும் பல்வேறு வகையான குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரிடமிருந்து தங்க நகைகளையும்,…
மேலும்

தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு நிறை­வே­றாது-சிவ­சக்தி ஆனந்­தன்

Posted by - May 20, 2018
தேசிய அர­சுக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிரச்­சி­னை ­க­ளைப் பார்க்­கும் போது தமிழ் மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் நடை­பெ­றுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இவ்­வாறு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் தெரி­வித்­தார். புளி­யங்­கு­ளத்­தில் நேற்று நடை­பெற்ற மாதிரி வீட்டுத் ­திட்­டத்தை திறந்து…
மேலும்

3 மணி நேரம் புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு பகுதியில் காற்­று­டன் பெய்த மழை!! வீடு­கள் பல சேதம்

Posted by - May 20, 2018
புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்­றுக் காற்­று­டன் பெய்த மழை­கா­ர­ண­மாக தற்­கா­லிக வீடு­கள் பல சேத­ம­டைந்­தன. பயன்­தரு மரங்­கள் பல முறிந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. பிற்­ப­கல் 3.30 தொடக்­கம் 6 மணி­வரை புதுக்­கு­டி­யி­ருப்பு முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வளை போன்ற பகு­தி­க­ளில் கடும் காற்­று­டன் மழை பெய்­தது. இடை­யிடை…
மேலும்

புதிய அரசியலமைப்புப் பணிகள் மீண்டும் 24 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - May 20, 2018
புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளை மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு செயற்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது, அரசியலமைப்பு தொடர்பிலான இறுதி அறிக்கை பற்றியும்…
மேலும்

மைத்திரியை தனிமைப்படுத்தி விட்டு, மஹிந்தவின் சூழ்ச்சியில் அகப்பட மாட்டோம்- துமிந்த

Posted by - May 20, 2018
அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைப்படுத்தி விட்டு எதிர்க் கட்சியில் அமர்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஒரு கட்சியாக இருந்தே ஸ்ரீ…
மேலும்

பெய்து வரும் மழை இன்று150 மி.மீ. ஆக அதிரிக்கும் -வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - May 20, 2018
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழை இன்று(20) 150 மி.மீ. ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்