நிலையவள்

சட்டசிக்கல்களை தீர்த்தபின் மாகாண சபை தேர்தல்-ரணில்

Posted by - September 24, 2018
சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்த பின் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல…
மேலும்

உழவு இயந்திரத்தில் சிக்குண்ட குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

Posted by - September 24, 2018
உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண்…
மேலும்

வெலிங்டன் குடியிருப்பில் தீ விபத்து

Posted by - September 24, 2018
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இந்த இரு வீடுகளிலும் இருந்த 08 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் …
மேலும்

பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள நடைபாதையில் திடீரென பாரிய குழி

Posted by - September 24, 2018
பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் அருகிலுள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தை நடைபாதையில் இன்று (24) அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நடைபாதையில் காணப்பட்ட மின்கம்பமும், மரம் ஒன்றும் சரிந்து வீழ்ந்துள்ளன. சேதமடைந்துள்ள மின் கம்பத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும்

 பூஜித ஜயசுந்தரவை பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து அனுப்ப அமைச்சு தீர்மானம்

Posted by - September 24, 2018
சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை விசேட பயிற்சி ஒன்றுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபருடன் பிரதி அமைச்சர் நளின் பண்டார, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இந்த பயிற்சியில்…
மேலும்

DIG நாலக சில்வா கைது செய்யப்பட வேண்டும்- அமரவீர

Posted by - September 24, 2018
ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியத்தைப் பிரதேசத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - September 23, 2018
கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணுபிட்டிய ரயில் கடவைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 27 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். பேலியகொட பிரதேசத்திலிருந்து கிரிபத்கொட பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயின் கடத்தி…
மேலும்

அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கவே 16 பேரும் முயற்சிக்கின்றனர்-ரஞ்சித் மத்தும

Posted by - September 23, 2018
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான…
மேலும்

90 அலகுகளுக்கு குறைந்த மின்பாவனையாளர்களுக்கு இலவச மின்குமிழ்

Posted by - September 23, 2018
மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மானி வாசிப்பாளரினால் எதிர்வரும் நாட்களில் வீடுகளுக்கே இந்த மின் குமிழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக…
மேலும்

ஐ.தே.க.வின் நோக்கத்திற்கு எல்லை நிர்ணய மீளாய்வு குழு ஆதரவு

Posted by - September 23, 2018
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடாக காணப்படுகின்றது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, மாகாண சபை தேர்தலை நடத்தினாலும், நடத்தாவிடினும் அரசாங்கத்திற்கு தோல்வியே கிடைக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் மாகாண சபை…
மேலும்