தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கல்லாரை பகுதியை சேர்ந்த ஒரு வயதும் 8 மாதங்களுமான விஜயகாந்த் தஸ்மிலன் என்ற ஆண் குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நேற்று நண்பகல் குறித்த குழந்தையின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை இயக்கி பின்பக்கமாக கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை இயந்திரத்தின் பின்னால் நின்றது தெரியாமல் மீண்டும் இயந்திரத்தை இயக்கிய போது உழவு இயந்திரத்தின் சக்கரம் குழந்தை மேல் ஏறியுள்ளது.

சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெ.கிறிஸ்தோபர் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.