பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.