மோட்டார் சைக்கிள் சாரதிகள் முழுவதும் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடைவிதித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…
“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கி, அதனைத் திருட்டுத்தனமாக நிறைவேற்றுவதற்கே இந்த அரசாங்கம் முயன்று வருகின்றது” என, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பணியாற்றும் சிறீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார். பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு அவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு, ஊடகவியலாளர் கீத் நொயர், கடத்தப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் தொடர்பான விசாரணைகளை, இறுதிவரை சுயாதீனமான முறையில் முன்னெடுக்க வேண்டும் என, சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு முன்னெப்போதுமில்லாதவகையில் 5ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர் விமர்சிப்பது தற்காலத்துக்குப் பொருத்தமற்றது.