கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள்

284 0

கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும்​ மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ​குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “பம்பலபிட்டியிலிருந்து வௌ்ளவத்தை வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, அநாவசியமான கட்டங்கள், 1,800 அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில், கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை நகர சபை, பிரதேச சபைகளில் பெற வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் 3 மாதங்களில், அனுமதி பெறுவதற்கான புதிய முறையை ​அறிமுகப்படுத்தவுள்ளோம். “அதாவது, எந்தவொரு நபரும் இணையத்தினூடாக நகர அபிவிருத்தி அதிகாரசசபையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை அமைக்கப்படும்” என்றார்.