தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்றில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளது என்பதே எமது குற்றச்சாட்டு என தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை…
விஷேட தேவையுள்ளோருக்கான கல்வியை வழங்துவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனிய நாட்டின் கல்வி கொள்கையினை இலங்கையிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு நடவக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றது.
அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு ஒரு வார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனநாயக ஒடுக்குமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த ஸ்ரீலங்கா படையினரது குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண பெண்களுக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாமை கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை கொலேஜிவீதிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.