சபையில் சலசலப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்..!

223 0

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்றில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

1983ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகளினால் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கேட்டிருந்தார்.

இதற்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பதில் வழங்கியிருந்தார்.

அந்த வகையில், “விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன, அவை தொடர்பான செய்திகள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இருக்கிறன. இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன் போது குறுக்கிட்ட சபை முதல்வர் லக்மன் கிரியெல்ல “அந்த செய்திகள் உள்ளூர் இணையத்தளங்களிலா அல்லது சர்வதேச இணையத்தளங்களிலா இருக்கின்றது” என கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர “அதனை நீங்கள் தான் தேடி பார்க்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இதன் போது சபையில் இருந்த பலரும் சிரித்துவிட்டார்கள். எனினும், மீண்டும் குறுக்கிட்ட சபை முதல்வர் “தெரியாவிட்டால் ஏன் கேட்கின்றீர்கள்..? புலம் பெயர் புலிகளுக்கு நீங்கள் வீணாக பிரச்சாரம் செய்கின்றீர்கள்” என குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலும், இதன் போது குறுக்கிட்டு பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது, புலி ஆதரவாளர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு சார்பனவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனரா..?” என தெரியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கேள்விகளுக்கு பதில் வழங்கிய அமைச்சர் சாகல ரட்நாயக்க, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என தெரிவித்திருந்தனர். எனினும், தற்போது புலிகள், புலிகள் என கூச்சலிடுகின்றார்கள் என கூறியிருந்தார்.