ஜேர்மனிய கல்விக் கொள்கையை இலங்கையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை

228 0

விஷேட தேவையுள்ளோருக்கான கல்வியை வழங்துவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனிய நாட்டின் கல்வி கொள்கையினை இலங்கையிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு நடவக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றது.

இந்த திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் ஜேர்மனிய நாட்டின் சிட்டிகாசல் கவுன்சிலின் உறுப்பினர் அநஸ்லி இரட்ணசிங்கம் ஆகியோருக்கும் இடையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் விஷேட தேவையுள்ளோருக்கான கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் டி.புன்னியதாச¸ தழிழ் கல்வி பணிப்பாளர் எஸ்.முரளிதரன், பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான பணிப்பாளர் திருமதி மகேஸ்வரி சபாரஜ்சன், சிவன் அறக்கட்டளையின் தலைவர் கணேசன் வேலாயுதம் அமைச்சரின் ஒருங்கிளைப்பு செயலாளர் எம்¸துறைசாமி உட்பட அமைச்சரின் செயலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த கலந்துரையாடலின் முடிவாக ஜேர்மனிய நாட்டின் விஷேட தேவையுடையோருக்கான புதிய கல்வி திட்டம் புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக நடைமுறைபடுத்தபடவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றதன் பின்னர் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபடும்.

இலங்கையில் 104 தேசிய பாடசாலைகளிலும், 600 மாகாண பாடசாலைகளிலும் மொத்தமாக 704 பாடசாலைகளில் விஷேட தேவையுள்ளோருக்கான கல்வி பிரிவு காணப்படுகின்றது. இதில் தேசிய பாடசாலைகளில் 206 ஆசிரியர்களும்¸ மாகாண பாடசாலைகளில் 764 ஆசிரியர்களும்¸ஏனைய விஷேட தேவையுள்ளோருக்கான தனி பாடசாலைகளில் 415 ஆசிரியர்களும் மொத்தமாக 1410 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.

இந்த செயற்திட்டம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரிடம் வினவிய போது, விஷேட தேவையுள்ளோருக்கான கல்விக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் இந்த கல்வியை இலங்கையில் அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயமானதாகும். இதற்கு உலக நாடுகள் பல எமக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

இதில் ஜப்பான் நாட்டின் உதவியும், தற்போது எம்முடன் இணைந்து செயற்பட வந்திருக்கும் ஜேர்மனிய நாட்டின் சிட்டிகாசல் கவுன்சிலின் உறுப்பினர் அநஸ்லி இரட்ணசிங்கம் அவர்களின் உதவியும் வரவேற்கதக்க ஒன்றாகும். விஷேட தேவையுள்ளேரும் இந்த நாட்டின் பிரஜைகளே. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கபட வேண்டிய ஒன்றாகும்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இவர்களின் கல்வி அபிவிருத்திக்கு அரசாங்கம் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இலங்கையில் காணப்டும் பாடசாலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகைளில் 704 பாடசாலைகளில் மாத்திரம் விஷேட தேவையுள்ளோருக்கான கல்வி பிரிவு காணப்படுகின்றது.

இதனை எதிர் காலத்தில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளபட்டுள்ளன. இந்த மாணவர்கள் அதிகமாக காணப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் விஷேட தேவையுள்ளோருக்கான கல்வி பிரிவு ஆரபித்து இந்த மாணவர்களில் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறினார்.