எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வீடுகளுக்கு அத்துமீறிய வகையில் நுழையும் பொலிஸார் அங்கு போதைப்பொருட்களை இரகசியமான முறையில் வைத்து விட்டு பின்னர் கைது செய்கிறார்கள். பொலிஸாரின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நேபாளம், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் உருவான மக்கள் எழுச்சிகள் வழக்கத்துக்கு மாறானவை அல்ல. மாறாக அவை சமத்துவமின்மை மேலோங்குகையில் ஏற்படக்கூடிய விளைவினைக் காண்பிக்கும் எச்சரிக்கைகள் ஆகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது. கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள…
புதிய சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஒலுவில் துறைமுகம் தொடர்பான எதிர்காலத் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடன் தொடர்புடைய பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டது.
அநுராதபுரத்தில் மொரகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் இரண்டு யானை தந்தங்களுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயை எதிர்வரும் 18 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.