பதில் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்

47 0

சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய திங்கட்கிழமை (15) இரவு சீனாவிற்கு சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.  சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் சீனாவுக்குச் சென்றுள்ளதுடன் , அம்மாநாட்டில் பொலிஸ்மா அதிபர்  பிரியந்த வீரசூரிய உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.  அதற்கமைய மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலேயே இவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, பொலிஸ்மா அதிபர் செப்டம்பர் 20 அன்று நாடு திரும்ப உள்ளார்.  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குக்கு பொறுப்பாக செயற்படுவதோடு,முன்னதாக நான்கு சந்தர்ப்பங்களில் இவர் பதில் பொலிஸ்மாஅதிபராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.