‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு

407 0

கொழும்பு ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வு இந்த வருட இறுதியில் இடம்பெறும் என ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது.

350 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம், தெற்காசியாவிலேயே அதிக உயரமான கட்டடமாக திகழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானெலி ஒலிபரப்புகள் சேவைகள் என்பன தொழிற்படவுள்ளன.

இதன் மூலம் சகலரும் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோபுரத்தில் பல விற்பனை அங்காடிகள், விருந்தகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள், தலா 450 பேர் அமரக்கூடிய விருந்தகங்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச விருந்தினர்கள் தங்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட விருந்தகங்களும் இந்தக் கோபுரத்தில் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.