ஈழ மக்களுக்காக புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!!(காணொளி)

489 0

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வோண்டாம் எனவும் புலம்பெயர்தமிழர்களால் ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 இல் அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.