ட்ரம்ப், தமது புதிய பாதுகாப்பு ஆலோசகரை தெரிவு செய்தார்

286 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமது புதிய பாதுகாப்பு ஆலோசகரை தெரிவு செய்துள்ளார்.

இந்த பதவியில் இருந்து மைக்கல் ஃப்லைன், ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாக பதவி விலகினார்.

இதனை அடுத்து கடற்படைத் தளபதி ரொபர்ட் ஹவார்ட் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட போதும், அவர் அந்த பதவியை புறக்கணித்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரியான எச்.ஆர்.மெக்மாஸ்ட்டர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியதுடன், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.