யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன(காணொளி)

313 0

 

யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள மக்களிற்கென 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த பகுதியில் 250 தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, நாவற்குழி மேற்கு பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் வசித்துவரும், 200 தமிழ் குடும்பங்களுக்கும், 50 சிங்களக் குடும்பங்களுக்குமாக இருநூற்றைம்பது வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தலா ஐந்து இலட்சம் பெறுதியில் சகல வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர்

எஸ்.முரளிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.