கிளிநொச்சியில் பதட்டமான நிலை

615 0

img_0038கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மாலை பதட்டமான நிலை ஏற்பட்டது.

குறித்த வீதியில் போக்குவரத்து செய்யும் வாகனங்களை எதிர்த்து இளைஞர்கள் போத்தல்களை வீதியில் உடைத்தனர்.

சம்பவத்தினை அறிந்த பொலிசார் குறித்த பகுதிக்கு வருகை தந்த போதிலும், நிலைமை படு மோசமான நிலைக்கு சென்றது.

இதன் காரணமாக குறித்தபகுதிக்கு கலகம் அடக்கும் பொலிசார் வருகை தந்தனர்.

இதன்போது பதட்டமான நிலை கிளிநொச்சியில் காணப்பட்டது, குறித்த கூட்டத்தில் போத்தலுடன் பொலிசாரை ஒருவர் அச்சுறுத்த முற்பட்ட போது நிலைமை மோசமடைந்தது, பொலிசார் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மிகவும் பதட்டம் நிலவியது. மிக நீண்ட நேரமுயற்சியின் பின்னர் பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது பொலிஸ் சாஜன்ட் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் போத்தாலால் தாக்குதல் மேற்கொண்டார்.

இதனையடுத்த பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து கிளிநொச்சி ஏ எஸ் பி ரொசான் ராஜபக்ச வருகை தந்ததுடன், கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரின் நீண்ட நேர முயற்சியின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் ஆங்காங்கே டயர்கள் கொழுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடதக்கது.

img_0073 img_0038 img_0044 img_0046 img_0054 img_0055 img_0064 img_0073 img_0076 img_0077 img_0082 img_0087 img_0088 img_0089 img_0091 img_0092