புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஆதாரங்கள்

362 0

puli-logo-300x160விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் ஆலோகர் ஒருவர் அண்மையில் கூறி இருந்தார்.

ஏற்கனவே இதற்கான உத்தரவை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுத்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையானது, பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்றும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஏன் தடை செய்ய வேண்டும்? என்பதற்கான விளக்கங்களையும், சான்றுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.