நிலையவள்

சுங்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

Posted by - February 8, 2019
தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கப்பகுதியில் தேங்கியிருந்த கொள்கலன்களை துரிதமாக பரிசோதனைக்கு பின்னர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக சுங்க பணிப்பாளர் மகேந்திர அர்த்தநாயக்க தெரிவித்துள்ளார்.  சுங்கத் திணைகளத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வந்தது. …
மேலும்

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்-ராஜித

Posted by - February 8, 2019
27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.  அதன்படி விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய…
மேலும்

கேகாலை விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 8, 2019
கேகாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரகொட பேலிகலை துணைவீதியில் ,வேரகொடயை நோக்கி சென்ற கார் டிரக்டர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதுடன், விபத்தில் டிரக்டர் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.…
மேலும்

பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் -தினேஷ்

Posted by - February 8, 2019
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமலேயே அதிகாரம் செலுத்தி வருகின்றது. அரசாங்கத்தை உறுதிப்படுத்த தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக குறிப்பிடுவது  ஏற்றுக்கொள்ள முடியாது. உறுதியான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற…
மேலும்

அமெரிக்க தூதரகத்திற்கு முன் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 8, 2019
தென்னமெரிக்க நாடான  வெனிசுலாவில்  ஏற்பட்டிருக்கும்  அரசியல் நெருக்கடியில்  அமெரிக்கா  தலையிடுவதைக்கண்டித்து  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக  இன்று வெள்ளிக்கிழமை   மக்கள் விடுதலை  முன்னணியினர்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்தில் கலங்துகொண்ட  மக்கள் விடுதலை  முன்னணியின்  ஆதரவாளர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெனிசுலாவின்…
மேலும்

அபுதாபியில் கைதுசெய்யப்பட்ட பாதாள கோஷ்டி,பொய்யான தகவல்கள் பரவுகின்றன- டலஸ்

Posted by - February 8, 2019
அபுதாபியில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு தலைவன் மற்றும்  மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இன்று மாறுப்பட்ட பொய்யான வதந்திகளே மக்கள் மத்தியிலும் பேசப்படுகின்றது. கம்புறுப்பிடிய பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது. இச்செய்தியானது முற்றிலும் பொய்யானது என  பாராளுமன்ற…
மேலும்

வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி-ஹரிசன்

Posted by - February 8, 2019
வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுகின்றது. என்றாலும் வடக்கில் வெள்ளத்தில்  நெற் செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி முதல்…
மேலும்

சட்டவிரோத மதுபானம் நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - February 8, 2019
கந்தானை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் (கசிப்பு) உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு  5 இலட்சத்து 73 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் மதுபானம் கசிப்பும், மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 32 இலட்சத்து 4 ஆயிரத்து 600 மில்லி லீற்றர் கோடாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…
மேலும்

இந்திய பிரஜைகள் 09 பேர் கைது

Posted by - February 8, 2019
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 09 பேர் நுவரெலிய, பொரலந்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்…
மேலும்

துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது

Posted by - February 8, 2019
நபர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்த இரண்டு பேர் சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சீதுவை, லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்த இரண்டு பேர் வீட்டின் உரிமையாளருக்கு துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
மேலும்