நிலையவள்

சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை – ரிஷாட்

Posted by - May 17, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை தான் விடுவிக்குமாறு கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை…
மேலும்

சம்மாந்துறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

Posted by - May 17, 2019
சம்மாந்துறையில் பாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாகவுள்ள நீர் தேக்கத்திலிருந்தே நேற்று  இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள்-21, ரி 56…
மேலும்

சிறைக் கைதிகளை உறவினர்கள், நண்பர்கள் நாளை சந்திக்க முடியாது

Posted by - May 17, 2019
இம்முறை வெசாக் தினமான 18 ஆம் திகதி சிறைக் கைதிகளுக்கு உறவினர்களையும், நண்பர்களையும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளிலேயே இதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் தினத்தன்று இடம்பெறவுள்ள…
மேலும்

சஹரானுடன் தொடர்புடைய இருவர் கைது!

Posted by - May 17, 2019
தாக்குதல்களுடன் தொடர்புடைய இருவர் ஹொரவபத்தனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும்

ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலை குறித்து ஆய்வுகள் ஆரம்பம்!

Posted by - May 17, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் நாடாளுமன்ற உயர் கல்வி…
மேலும்

யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

Posted by - May 17, 2019
இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் இன்று காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு…
மேலும்

முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

Posted by - May 17, 2019
முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற…
மேலும்

மதூஸின் தகவல்களை வைத்து ஆயுதங்கள் மீட்பு

Posted by - May 17, 2019
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுக்கப்படும் மாகந்துரே மதூஸினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் பலவற்றை கம்பஹா வெலிவேரிய பிரதேசத்திலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதூஸிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப் பெற்ற…
மேலும்

முள்­ளி­வாய்க்­காலில் உயிர் நீத்த உற­வு­க­ளுக்கு அமை­தி­யாக அஞ்சலி செலுத்துவோம்-மாவை

Posted by - May 17, 2019
தமி­ழின விடு­த­லையை நெஞ்­சி­லி­ருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப் பலி­யா­கி­விட்ட உறவுகளுக்கு அஞ்­சலி செலுத்தும் ஒரே எண்ணத்துடன் அமை­தியாக செயல் ப­டுவோம். இம்­மு­றையும் முள்­ளி­வாய்க் கால் முற்­றத்தில் நினை­வேந்தல் ஏற்பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

Posted by - May 17, 2019
லுனுகம்வெஹர – பெரலிஹேல பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு…
மேலும்