முள்­ளி­வாய்க்­காலில் உயிர் நீத்த உற­வு­க­ளுக்கு அமை­தி­யாக அஞ்சலி செலுத்துவோம்-மாவை

281 0

தமி­ழின விடு­த­லையை நெஞ்­சி­லி­ருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப் பலி­யா­கி­விட்ட உறவுகளுக்கு அஞ்­சலி செலுத்தும் ஒரே எண்ணத்துடன் அமை­தியாக செயல் ப­டுவோம்.

இம்­மு­றையும் முள்­ளி­வாய்க் கால் முற்­றத்தில் நினை­வேந்தல் ஏற்பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாராளுமன்றக் குழு துணைத்­த­லை­வ­ரு­மான மாவை.சோ.சேனாதிராசா தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் வெளியிட்­டுள்­ள­அ­றிக்­கையில் தெரிவிக்கப்பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையில் தமி­ழினம் சுதந்­தி­ரத்­திற்­கா­கவும் தன் அர­சாட்­சியை மீட்டெடுக்­கவும், நிலை நாட்­டவும் அறு­ப­தாண்டு இனப் போரில் குறிப்­பாக இறுதிப் போரில் களப் பலி­யா­கிய இலட்­சக்­க­ணக்­கான உயிர்­களின் தியா­கத்தை நினைவு கூர்ந்து ஆரா­தித்து அஞ்­சலி செலுத்தும் நாள் நிகழ்ச்சி இவ்­வாண்­டிலும் முள்­ளி­வாய்க்கால் முற்றத்தில் நிகழ்­கின்­றது.

தமிழ் இன விடு­த­லைக்­காகத் தம்­மு­யிரை அர்ப்­ப­ணித்த உத்­தமர் தம் தியா­கத்தைப் பேணிப் பாது­காத்து ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து கண்ணீர் விட்­ட­ழுது ஆறுதல் பெறு­வது தமிழர் பாரம்­ப­ரியம், மரபாகும்.

தெய்வ நம்­பிக்கை, மத நம்­பிக்கை கொண்டோர் தம் வீடு­க­ளிலும், கோவில்­க­ளிலும் வழி­பா­டி­யற்­றுவர்.

இந்து மக்கள் ஈமக் கடன் செய்­வ­தற்கு ஆற்­றோரம், கட­லோரம் சென்று குறித்த இடங்­களில் நீராடிப் பூசைகள் செய்து ஆத்ம சாந்திப் பிரார்த்­தனை செய்­வது,ஈமக் கடன் செய்­வது வழக்கம்.

கடந்த பத்து ஆண்­டு­க­ளிலும் அள­விடா நெருக்­க­டிகள் மத்­தி­யிலும் இந் நிகழ்ச்­சி­களில் ஆங்­காங்கே, குறிப்­பாக முல்லை. முள்ளிவாய்க்கால் நினை­வி­டத்­திலும் அணி திரண்டு,ஒன்று கூடி கண்­ணீரில் நனைந்து உள­மு­ருகிப் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர்.

இவ்­வாண்டும் இப் பிரார்த்­த­னைகள், அஞ்­சலி நிகழ்ச்­சிகள், ஈமக்கட­னி­யற்­றுதல் என்பன இடம்­பெ­ற­வுள்­ளன.அது எமது கடமை என தெரிவித்துள்ளார்.