நிலையவள்

மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலி

Posted by - October 13, 2019
வௌிமட பிரதேச சபை பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் 3 பேர் பலி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 18, 14 மற்றும் 10 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த…
மேலும்

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூவர் கைது

Posted by - October 13, 2019
மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் 3 பேரை கடற்படையினர் நேற்று (12) காலை கைது செய்துள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடுக்கையின் போது, அனுமதி இல்லாமல் சேகரிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகள் பறிமுதல்…
மேலும்

தங்க நகைகளுடன் இலங்கை தம்பதியினர் சென்னையில் கைது

Posted by - October 13, 2019
ஒரு தொகை தங்க நகைகளுடன் இலங்கை தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 42 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்த 37 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான 973…
மேலும்

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 375 முறைப்பாடுகள்

Posted by - October 13, 2019
தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் 11 திகதி மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 11…
மேலும்

ஐ.தே.க.ஆட்சியைக் கைப்பற்றும் என்பது மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான கருத்தாகும்- மஹிந்த

Posted by - October 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றும் என்பது, மேற்கில் சூரியன் உதிப்பதற்கு ஒப்பான ஒரு கருத்தாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும்…
மேலும்

தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம் – சி.வி.

Posted by - October 12, 2019
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - October 12, 2019
பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. முன்வைக்கப்பட்ட சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளமையை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் இவர்கள் பணிகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு…
மேலும்

“இலங்கை இந்து தேசிய மகாசபை” யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 12, 2019
இலங்கை இந்து தேசிய மகா சபை அமைக்கப்பட வேண்டி தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவைக்கு சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை…
மேலும்

எல்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகமான பகுதி-சுஜீவ

Posted by - October 12, 2019
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முனைப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க இதனை தெரிவித்திருந்தார்.…
மேலும்

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - October 12, 2019
சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொன்நகர் – துணுக்காய் பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட…
மேலும்